ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (18:48 IST)

தேர்தல் பிரச்சாரத்தில் தூங்கி கொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர்கள்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் கர்நாடகத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசி கொண்டிருந்தபோது மேடையில் உட்கார்ந்திருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் தூங்கி வடிந்த வீடியோ காட்சி ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவ்வாறு தூங்கியவர்களில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போதே தூங்குபவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்ட பின்னர் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்வார்கள் என்று பாஜகவினர் இந்த வீடியோவை வைத்து எதிர்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.,