1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 மே 2018 (16:40 IST)

பலாத்கார சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம் - பாஜக அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு

பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்புக்கு பெற்றோர்கள தான் காரணம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையாகி உள்ளது. 
தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை பாஜகவினர் பார்ட் டைம் தொழிலாக பார்த்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களது கிண்டல் உண்மையாகும் வகையில் தான் பாஜகவினர்களும் பேசி வருகின்றனர்.
 
உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ சுரேந்திரசிங் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய போது, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்புக்கு பெற்றோர்கள்தான் காரணம் என்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்பது பெற்றோர்களின் கடமையாகும். அவர்களை சுதந்திரமாக திரியவிடுவதே சமூதாய சீர்கேடிற்கு முக்கிய காரணமாக அமைகிறது என்றுள்ளார்.

குற்றவாளிகளை தண்டிக்காமல், ஒரு அமைச்சர் இப்படி பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இவர் ஏற்கனவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். 
 
பொறுப்பற்ற வகையில் பேசக்கூடாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்த நிலையிலும் பா.ஜனதாவினர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார்கள்.