வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (18:35 IST)

பாஜக இப்படி செய்தால் இந்தியாவும் பாகிஸ்தான் ஆகிவிடும் - பிரகாஷ் ராஜ்

மதத்தையும் அரசையும் பாஜக ஒன்று சேர்த்தால் இந்தியாவும் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

 
நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் குறித்து விமர்சனம் செய்ய தொடங்கியது முதல் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறியதாவது:-
 
நாம் தேர்ந்தெடுத்துள்ள பிரதிநிதிகளிடம் நாம் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும். நான் அரசியலில் களமிறங்க உள்ளதால் கேள்விகள் கேட்பதாக சிலர் கூறுகின்றனர். என்னுடைய ஒரே குறிக்கோள் மக்கள் எதையும் மறக்க கூடாது என்பதே.
 
பாஜக ஒரு விஷயத்தை மறக்கடிக்க மற்றொரு விஷ்யத்தை கிளப்பி விடுகிறது. என்னதான் திசை திருப்பினாலும் பாஜக அளித்து வரும் கஷ்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். இதனால் பாஜக மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.