அதானிக்கு கடன் குடுத்தது ஏன்? எல்.ஐ.சி, SBI முன்பு நாடு தழுவிய போராட்டம்! – காங்கிரஸ் அறிவிப்பு!
பங்குசந்தை முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அதானி நிறுவனத்தில் முதலீடு மற்றும் கடன் கொடுத்ததை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
பிரபலமான அதானி குழும நிறுவனம் பங்குசந்தையில் மோசடி செய்ததாக ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சையால் அதானியின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உலக பணக்காரர்களின் டாப் 10 பட்டியலில் இருந்தும் கௌதம் அதானி வெளியேறினார்.
அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி நிறுவனம் சுமார் ரூ.36,474 கோடியை முதலீடு செய்துள்ளது. அதுபோல அதானி நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளில் எஸ்பிஐ வங்கி முதல் இடத்தில் உள்ளது. சொத்துகளின் அடிப்படையிலேயே கடன் வழங்கியதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதானி நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்த எல்.ஐ.சி நிறுவனம் மற்றும் கடன் கொடுத்த எஸ்பிஐ வங்கியை கண்டித்து வரும் பிப்ரவரி 6ம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K