வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:33 IST)

மும்பை: விமானத்தில் தகராறு செய்த இத்தாலி பெண் கைது!

tata flight
மும்பைக்குச் செல்லும் விமானத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் தகராறு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு மீரகத்தில் அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார்.

எகானமி பிரிவில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பாவ்லோ பெருசியோ விமானம் புறப்பட்ட பின், தனக்கு பிசினஸ் வகுப்பில்  இருக்கை வேண்டும் என்ற கேட்டு, விமான ஊழியர்களுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் அரை நிர்வாணக்கோலத்தில்  இருந்த அப்பெண் காலையில் சத்ரபதி மகாராஜ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் போலீஸாரால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.