வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (20:50 IST)

கொரோனா பாதித்த இருவர் குணமடைந்தனர் : மகாராஷ்டிர சுகாதாரத் துறை தகவல் !

கொரோனா பாதித்த இருவர் குணமடைந்தனர் : மகாராஷ்டிர சுகாதாரத் துறை தகவல் !

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் சுமார் 519 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். 

அதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர், முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதாக அம்மாநில  சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.