சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..

Arun Prasath| Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:09 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்,மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் அரை மணி நேரம் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சிறையிலேயே விசாரிக்கிறோம் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி சிறையிலேயே விசாரிக்க அனுமதி கொடுத்தார், இந்நிலையில் நாளை திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை  30 நிமிடங்கள் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :