வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (16:08 IST)

”சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது..” அதிரவைத்த தேர்தல் அறிக்கை

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என மஹாராஷ்டிராவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தனது அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜகவின் செயல்தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்ட அறிக்கையில், மஹாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்ரி பாய் பூலே, மற்றும் அவரோடு வீர சாவர்க்கருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீர சாவர்க்கர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார். மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மஹா சபை ஆகிய ஹிந்துத்துவா அமைப்புகளின் முன்னோடியாகவும் திகழ்ந்தவர். மேலும் காந்தி கொலை வழக்கில் 8 ஆவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு பின்பு நிரபராதி என அந்த வழக்கிலிருந்து விடுவிக்கபட்டதும் குறிப்பிடத்தக்கது.