திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (17:40 IST)

ரூ.450 க்கு சமையல் சிலிண்டரை வழங்குவோம் - அமைச்சர் அமித் ஷா

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த 5 மாநிலங்களுக்கானன வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

எனவே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இன்று இந்தூரில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது   அவர் கூறியதாவது: ''வரும் 2024ல் மீண்டும் ஆட்சிக்கு வந்து மாதம் 5 கிலோ ரேசன் பொருட்கள் இலவசமாக அளிப்போம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ரூ.450க்கு வழங்குவோம்'' என்று தெரிவித்துள்ளார்.