செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (15:57 IST)

அமைச்சர் விஜயபாஸ்கர் கொசுக்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்ய வேண்டும்; சேலத்தில் போராடிய பெண்கள்

டெங்கு காய்ச்சலினால் மரணங்கள் அதிகரித்து வருவதால் கொசுக்களுக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேசன் செய்யப்படும் என்று சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள் கூறியுள்ளார்.


 

 
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகமாகி வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலத்தின் முன்பு, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் சார்பாக சுகாதார சீர்கேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்கள்.
 
அதில், டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் குழுவோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து டெங்கு கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் கொசுக்களுக்கு குடும்ப கட்டுபாடு செய்து சீர்வரிசையை சுகாதாரத்துறை அமைச்சருக்கும், சுகாதார செயலாளருக்கும் அனுப்புவோம் என்றனர்.
 
இவர்களின் இந்த போராட்டம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்களை ஒழிக்க அவர்கள் விடுத்த கோரிக்கை பெரும் வினோதமாக உள்ளது.