புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:25 IST)

மிளகாய்த்தூள் குண்டுகளை வீசி அகதிகளை விரட்டியடிக்கும் ராணுவம்

மியான்மர் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் அகதிகளாக நுழையும் ரோஹிங்கியா மக்களை எல்லை ராணுவப்படை விரட்டியடித்து வருகிறது.


 

 
மியான்மர் நாட்டில் இனச் சுத்தகரிப்பு என்ற பெயரில் ரோஹிங்கியா இன மக்களை அந்நாட்டு ராணுவம் அழித்து வருகிறது. இதனால் ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷ் மற்றும் இந்தியவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். 
 
பங்களாதேஷ் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8,00,000 ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்துள்ள ரோஹிங்கியா மக்களை நாடு கடத்தும் திட்டத்தில் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் பங்களாதேஷ் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ரோஹிங்கியா மக்களை எல்லை ராணுவம் விரட்டியடித்து வருகிறது. அவர்கள் மீது மிளகாய் தூள் கலந்த புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்து வருகின்றனர்.
 
மேலும் மியான்மரில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும்போது இதுபோன்ற சம்பவம் நிகழ்வது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.