புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (11:55 IST)

ஆரம்பமான தீபாவளி சோகம்; பட்டாசு ஆலை விபத்து; 8 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குமர்டுபி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் அறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் பலியின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு அதிக அளவில் குடோனில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வந்தாலே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.
 
பட்டாசு ஆலையில் ஏற்படும் ஒவ்வொரு விபத்திலும் உயிர் சேதம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. சட்ட விரோதமாக இயங்கும் பட்டாசு ஆலைகளே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. இருந்தும் அரசு இதில் கவனம் செலுத்தாமல் மௌனம் காத்து வருகிறது.
 
Photo Courtesy: ANI