1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hindu Front Personality Sasikumar Wife Attempt Suicide at Coimbatore

கோவையில் கொலை செய்யப்பட்ட சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி

இந்து முன்னணி
கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


 

 
கோவையில் கடந்த 22-ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்நிலையில், சசிகுமாரின் மனைவி யமுனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தனது வீட்டில் யமுனா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
 
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அடுத்த கட்டுரையில்
தோனி பல பெண்களை காதலித்தார்: முகத்திரையை கிழிக்கும் ராய் லட்சுமி!