1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:56 IST)

வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி.! பயணி புகார்..!

Cockroach
வந்தே பாரத் ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சியடைந்த பயணி, இது குறித்து புகார் அளித்துள்ளார்.
 
ஷீரடியில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பயணி  உணவின் தரம் குறித்து, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார்.
 
இதனையடுத்து ஐஆர்சிடிசி அளித்த பதிலில், “உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என்றும் இந்த சம்பவமானது மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 
 
உணவு அளிக்கும் சேவை வழங்குநருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், சமையலறை முழுவதையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது.

 
இந்நிலையில், உணவில் உயிருடன் கரப்பான் பூச்சி இருப்பது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே துறையின் இந்த அலட்சியப் போக்கிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.