புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (12:18 IST)

ஏர் இந்தியா விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..! டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு..!!

Flight
டெல்லி விமான நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
டெல்லி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று விசாகப்பட்டினம் செல்ல தயாராக இருந்தது. விமானத்தில் மொத்தம் 107 பயணிகள்  இருந்த போது, விமான நிலையத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. 
 
அதில் பேசிய மர்மநபர் ஒருவர், ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், சிறிது நேரத்தில் விமானம் வெடித்துச் சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.
 
இதனால அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணிகளை உடனடியாக வெளியேற்றி, அவர்களின் உடமைகள் மற்றும் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லாததால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். சமீபகாலமாக விமானம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.