ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:40 IST)

நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து.! பராமரிப்பு பணிக்காக 6 ரயில்கள் ரத்து என அறிவிப்பு..!!

Vanda Bharath Rail
விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இரு மார்க்கங்களிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விருத்தாசலம் - திருச்சி, திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி, திண்டுக்கல் - விழுப்புரம் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் பல்வேறு ரயில்கள் வேறு மார்க்கமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.