இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான பரிந்துரைகள் பெறப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயரும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகிறது. அது தவிர்த்து இலக்கியம், உலக அமைதிக்கான நோபல் பரிசுகளும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெயர் பரிந்துரையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் உள்ளது. நார்வேயின் பார்டியட் செண்ட்ரம் அரசியல் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு இந்த பரிந்துரையை செய்துள்ளனர். இம்ரான் கான் அவரது ஆட்சிக்காலத்தில் அண்டை நாடுகளுடனான நட்புறவை பேணுதல் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வர முயற்சித்த பணிகளுக்காக அவரது பெயரை பரிந்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2019ம் ஆண்டிலும் இம்ரான் கான் பெயர் நோபலுக்கு பரிந்துரைக்கப்பட்டது ஆனால் வழங்கப்படவில்லை.
கடந்த 2023ம் ஆண்டில் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஆட்சியை இழந்த இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K