வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (12:33 IST)

10 ரூபாய் டிக்கெட், எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யலாம்: மெட்ரோ ரயில் அறிவிப்பு

cochi
பத்து ரூபாய் டிக்கெட் எடுத்து எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொள்ளலாம் என கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று சுதந்திர தின சிறப்பு டிக்கெட் கட்டணம் குறித்த அறிவிப்பை கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
இதன்படி கொச்சி மெட்ரோ ரயிலில் பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி எந்த ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து எந்த ஒரு மெட்ரோ நிலையத்திற்கும் பயணம் செய்து கொள்ளலாம் 
 
இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நாட்டுப் பாடல்கள் நடனங்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது