ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:40 IST)

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலை நிகழ்ச்சி!

metro
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
 
75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 காவடி ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்றும் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது