செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:17 IST)

செலவு 22,000 கோடி; வரவு வெறும் 200 கோடி! – நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில்கள் சேவை தொடங்கி இதுநாள் வரை மொத்த வருவாய் ரூ.200 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாதாரண மின்சார ரயில், அரசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மெட்ரோ ரயில்களின் கட்டணம் அதிகமாக இருப்பதே பயணிகள் அதிகம் ஈர்க்கப்படாததற்கு காரணம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசகர் குழுவை நியமனம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.