பஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி: லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதிரடி!
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவிற்கு மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்தார். ஆதோடு தற்போது அவர் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் விஜய் மல்லையாவும் கோடி கணக்கில் வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பினார். அவரையும் இன்னும் பிடிக்கவில்லை தற்போது நிரவ் மோடிக்கும் எதிராக எந்த துரித நடவைடிக்கையையும் எடுத்திருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு பின்வருமாறு, 3 ஆண்டுகளாக ஒரே வங்கி கிளையில் பணியாற்றிய வங்கி உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டு இறுதியுடன் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கணக்காளர்கள் உள்ளிட்ட அலுவலர்களையும் உடனடியாக பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.