காவலாளியே திருடன்: ஐபிஎல் போட்டியில் முழங்கிய கோஷத்தால் பாஜக கலக்கம்

Last Modified புதன், 27 மார்ச் 2019 (11:57 IST)

பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் அனைவரும் தங்களை நாட்டின் காவலாளிகள் என்ற பொருள்படும் 'செளகிதார்' என்று கூறிக்கொண்டு வரும் நிலையில் அதே செளகிதார் பாஜகவுக்கு வில்லனாகவும் மாறியுள்ளது
 
நேற்று முன் தினம் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் திடீரென 'காவலாளிகளே திருடர்கள்' என்று பொருள்படும் 'செளகிதார் சோர்' என்ற முழக்கத்தை முழங்கினர். இந்த கோஷத்தின் அர்த்தம் புரியாமல் வெளிநாட்டு வீரர்கள் குழப்பம் அடைந்தாலும் இந்திய வீரர்களுக்கு நன்றாக புரிந்ததால் அவர்கள் தர்மசங்கடம் அடைந்தனர். இதனால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
நாடு முழுவதும் 'செளகிதார்'  என்ற முழக்கத்தை முழங்கி வரும் பாஜகவினர்களுக்கு இந்த சம்பவம் பெரும் கலக்கத்தை அளித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த 'செளகிதார்' விவகாரத்தை கையில் எடுத்து பாஜகவை விமர்சங்களால் விளாசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :