வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (20:11 IST)

திமுகவுக்கு எதிராக பிரச்சாரம்; எச்.ராஜாவுக்கு ஆதரவு? ரிவீட் அடிக்கும் அழகிரி?

முக அழகிரி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதே சமயம் இதனால் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, அழகிரி மற்றும் எச்.ராஜா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட பலரும் மு.க அழகிரி எச்.ராஜாவிற்கு ஆதரவு அளிக்கிறார். அவருக்காக வாக்கு கேட்க போகிறார். திமுக வேட்பாளர்களை எதிர்த்து வாக்கு சேகரிக்க போகிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர். 
இந்த செய்தி குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளார் அழகிரி. அவர் கூறியதாவது, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. எச்.ராஜாவும் நானும் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். 
 
அதை கொண்டு பாஜகவிற்கு நான் ஆதரவு அளித்துள்ளேன் என்று தவறான செய்தியையும் பரப்பி வருகிறார்கள். நான் யாருக்கு ஆதரவு தரவில்லை, என்னை யாரும் சந்திக்கவும் இல்லை என்று அழகிரி தெரிவித்துள்ளார்.