மீண்டும் கட்சி மாறும் ரஜினி-கமல் பட நடிகை!

Last Modified செவ்வாய், 26 மார்ச் 2019 (07:57 IST)
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்', கமல்ஹாசன் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம் உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. கடந்த 80களில் இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர்.
இந்த நிலையில் நடிகை ஜெயப்ரதா முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியிலும், அதன்பின்னர் ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியிலும் இணைந்தார். இந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பாஜகவில் இணையும் நடிகை ஜெயப்ரதாவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியை அக்கட்சி ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசிம்கான் போட்டியிடுவதால் அவரை எதிர்த்து போட்டியிட ஜெயப்ரதாவே சரியான வேட்பாளர் என மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது.

மேலும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து ஜெயப்ரதா விலக, ஆசிம்கான் தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுவதால் தனிப்பட்ட வகையிலான எதிரியை வீழ்த்தவும் அவர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :