பக்கம் பக்கமா பிரச்சார பேச்சு, ஒத்த வார்த்தை.. எச்.ராஜா ஆஃப்: சிவகங்கையில் ருசிகரம்!

Last Updated: செவ்வாய், 26 மார்ச் 2019 (18:10 IST)
வரும் மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகிறது. 
 
ஆனால், தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடையும் என்றே கணிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்தது.
 
இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் கார்த்தி சிதம்பரம் மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பாக சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
சிவகங்கையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் எச்.ராஜா. இவருடன் அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கர் எப்போதும் இருக்கிறார். விஜய் பாஸ்கர் எச்.ராஜாவிற்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்து வருகிறார். 
 
இப்படியிருக்க எச்.ராஜா தீவிரமகா பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது கூட்டத்தில் சிலர் பெரியார் வாழக என கோஷமிட்டனர். இதனால், பக்கம் பக்கமா பிரச்சாரத்திற்கு ரெடி பண்ணி வைத்திருந்த விஷயங்களை சில நிமிடங்கள் மறந்து மவுனம் காத்து பின்னர் அதை கண்டுக்கொள்ளாத படி மீண்டும் பிரச்சார பேச்சை துவங்கினார். 
 
இந்த நிகழ்வு சிறிது நேரம் பிரச்சாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. 


இதில் மேலும் படிக்கவும் :