1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (18:04 IST)

மகளை புதைக்க குழி தோண்டிய இடத்தில் உயிருக்கு போராடிய குழந்தை !

உத்தபிரதேசத்தில் மாநிலத்தில் உள்ள பரேலி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹித்தேஷ் குமார். இவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை 7 மாதக் குறை பிரசவத்தில் பிறந்தது சில  நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது. அதனால் பெற்றொர் அதிர்ச்சி அடைந்து குழந்தையை அடக்கம் செய்ய மயானத்தில் குழி தோண்டினர்.
அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் குழந்தையைப் புதைக்க குழிதோண்டிய இடத்தில் ஒரு குழந்தை இருந்ததைப் பார்த்த ஹித்தேஷ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையை  மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் குழந்தை தற்போது நல்லமுறையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்நிலையில் குழந்தையைக் குழி தோண்டி புதைத்துக் கொல்ல முயன்றது யார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இறந்தகுழந்தையானது, உயிருக்கு போராடிய இன்னொரு குழந்தையைக் காப்பாற்ற உதவியுள்ளதாக அங்குள்ள மக்கள் பேசி வருகிறார்கள்.