1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (08:14 IST)

10 ஆண்டுகளில் பல அறுவை சிகிச்சைகள் – கண்டுபிடிக்கப்பட்ட போலி மருத்துவர் !

உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் பத்தாண்டுகளாக போலி மருத்துவராக செயல்பட்ட போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் ஓம் பால் சர்மா என்பவர் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் இதுவரை நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டு இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பெங்களூரூவைச் சேர்ந்த ஆர்.ராஜேஷ் என்ற விமானப்படை மருத்துவருக்கு உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் அவருடைய எம்பிபிஎஸ் பட்டத்தில் தனது புகைப்படத்தை மாற்றி மருத்துவ சான்றிதழைப் போலியாக உருவாக்கியுள்ளார்.

இதை வைத்துக்கொண்டு மேற்படிப்புக்கான சான்றிதழ்களையும் பெற்று அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்துள்ளார். இதைத் தெரிந்துகொண்ட ஒரு கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இது சமம்ந்தமாக அவர் புகார் அளித்த போது அவரைப் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.