1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜனவரி 2018 (15:29 IST)

பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த முதலமைச்சர்; வலுக்கும் கண்டனங்கள்(வீடியோ இணைப்பு)

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரசார கூட்டத்தில் தன் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இங்கு, உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சர்தார்பூர் நகரில் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஒரு பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற சிவ்ராஜ் சிங் சவுகான் தன் பாதுகாவலரை கோபமாக கன்னத்தில் அறைந்தார்; பின் அவரை அங்கிருந்து போகும்படி தள்ளி விட்டார். சிவ்ராஜ் சிங் சவுகான் தன் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
பாதுகாவலரின் கடமையை செய்ய விடாமல் அடித்துள்ள முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலர் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதால், இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பாஜக வின் தரத்தை குறைக்கும் என காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

நன்றி: ABP ANANDA