1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (09:32 IST)

வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலி

சிரியாவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள இத்லிப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

துருக்கி எல்லையை ஒட்டி உள்ள சிரியாவின் இத்லிப் மாகாணம் போராளிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்விடத்தில் அவ்வப்போது சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், இப்பகுதியில் சிரிய அதிபருக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் சிலர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.