வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2018 (13:14 IST)

கர்நாடகா முதலமைச்சர் மீது ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் புகார்

இரும்பு தாதுகளை வெட்டி எடுத்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இதில் சித்தராமையா ரூ. 5 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். 
கர்நாடகாவில் பெரிய அளவில் சுரங்க ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி குமாரசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். சித்தராமையா முதலமைச்சர் ஆன பின்பு இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்க பல புதிய இரும்பு தாது சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 30 லட்சம் டன் இரும்பு தாது மட்டும் ஒரு ஆண்டில் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அதைவிட இருமடங்கு இரும்பு தாதுகளை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார்கள். ஊழல் செய்ய வசதியாக தங்களுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை சுரங்க துறைகளில் நியமித் திருக்கிறார்கள். ஊழலுக்கு உடன்படாத அதிகாரிகளை மாற்றி இருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் சுரங்கதுறை அமைச்சர் வினைய்குல்கர்னிக்கு முக்கிய பங்குள்ளது. 
இரும்பு தாது ஊழலில் சித்தராமையாவுக்கு சம்பந்தம் இல்லை என்றால், அவர் உடனடியாக இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.