வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (19:28 IST)

சென்னையில் இருந்து சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரெயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு!

sabarimala
சென்னையில் இருந்து சபரிமலைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
சென்னை எழும்பூர் மற்றும் கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது
 
இந்த அறிவிப்பு சபரிமலை பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திங்கள் புதன் வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதேபோல் செவ்வாய் வியாழன் சனி ஆகிய தேதிகளில்  கொல்லத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
சபரிமலை பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Edited by Siva