1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (11:57 IST)

சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு? அதிர்ச்சி தகவல்

NIA
சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு? அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக வெளிவந்ததும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது
 
அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது /தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran