மோசமான சாலையால் விபத்து ஏற்பட்டால்.... சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!
மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏற்பட்டால் அந்த விபத்துக்கு பொறுப்பேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை வரும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் மோசமான சாலைகள் இருப்பது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை இன்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் பிரேமலதா அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
மேலும் மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏதாவது ஏற்பட்டால் அதனால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.