நிலவில் இருந்து 70 கிமீ,., தொலைவில் சந்திரயான்-3 ன் விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்கள் வெளியீடு
சந்திராயன் 3-ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், விக்ரம் லேண்டர் வழக்கமான பரிசோதனைகளுடன் நன்றாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
தற்போது நிலவுக்கு சில கிலோமீட்டர்கள் மேலே உயரத்தில் சுற்றி வரும் விக்ரம் லேண்டர் மெல்ல நிலவில் தரையிறங்க தயாராகி வருகிறது.
நாளை மாலை மணிக்கு மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இதுகுறித்த நேரளை ஒளிபரப்பு 5.20 மணி முதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.
இந்த நிலையில், நிலவில் இருந்து 70 கிமீ,., தொலைவில் சந்திரயான்-3 ன் விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், சந்திராயன் 3 -ன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், விக்ரம் லேண்டர் வழக்கமான பரிசோதனைகளுடன் நன்றாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.