1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (10:22 IST)

நிலவை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் : சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு..!

நிலவைச் சுற்றி வரும் சந்திராயன் 3  விண்கலம் சுற்றுவட்ட பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே மூன்று முறை சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு வெற்றிகரமாக நடந்துள்ளது என்றும் 153×163  கிலோமீட்டர் தாழ்வான சுற்றுப்பாதையில் தற்போது சந்திராயன் 3 நிலவை சுற்றி வருகிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் அடுத்த சுற்று வட்ட பாதை குறைப்பு நாளை நடைபெறும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 7ஆம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது, ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக ,பறக்கிறது, இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன் என இஸ்ரோ தலைவர் தெரிவித்திருந்தார்.
 
Edited by Mahendran