வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (15:57 IST)

ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.. இறக்கும் முன் எழுதிய கலங்க வைக்கும் பதிவு

ஆக்ராவில் ஃபேஸ்புக் லைவ் மூலம், வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஷியாம் சிகர்வார் என்பவர், ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு இன்னொரு அணுடன் திருமணம் நிச்சயமானது. இதனால் மனமுடைந்த ஷியாம், அவர் வசித்த பகுதியின் அருகே அமைந்துள்ள ஒரு கோவிலில் தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் தனது நண்பர்களுடனும், குடும்பத்தாருடனும் தான் ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார்,. பின்னர் தான் கூறியபடியே லைவாக தற்கொலையும் செய்துள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தற்கொலைக்கான காரணங்களையும் பதிவாக எழுதியுள்ளார். அந்த பதிவில், தான் அந்த பெண்ணை இழந்துவிட்டதாகவும், தன்னால் அந்த பெண் இல்லாமல் வாழ முடியாது எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆக்ரா போலீஸார், ஷியாம் காதலித்த பெண் தனக்கு இல்லை என்ற மன அழுத்தத்தால் இவ்வாறு அவர் தற்கொலை செய்துகொண்டார் என கூறியுள்ளனர். ஷியாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின், அவரது உடலை தற்போது குடும்பத்தாரிடம் போலீஸார் கொடுத்துள்ளனர்.