1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central ministry department changed

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்.. முக்கிய இலாக்காக்கள் மாற்றம்..!

PM Modi
மத்திய அமைச்சரவையில் திடீரென சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பதவி ஏற்றது என்பதும் அதன் பிறகு ஒரு சில முறைகள் அமைச்சரவையில் சில மாற்றம் செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன அது குறித்து தற்போது பார்ப்போம்
 
நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவால், சட்டத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் புவி அறிவியல்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சட்டத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
வெளிநாடுகளில் இந்தியர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி: மத்திய அரசு அறிவிப்பு..!