வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (09:26 IST)

ஒரே நாளில் 120 கோடி வசூல் செய்த 3 படங்கள் – பொருளாதார மந்தநிலையா ?

இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான மூன்று படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இந்தியா பிரேசில் போன்ற அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது ‘நான் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சராக பணிபுரிந்துள்ளேன். அதனால் எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும். திரைப்பட விமர்சகர் கோமல் நஹ்தாவிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது அவர் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான வார், ஜோக்கர் மற்றும் சைரா நரசிம்மா ரெட்டி ஆகிய 3 படங்களும் சேர்ந்து 120 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளன எனக் கூறினார். அப்படியானால் நாட்டில் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். ’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.