செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (20:41 IST)

1 மணிநேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ்! – வெறித்தனம் காட்டிய விஜய் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் தயாராகியுள்ள பிகில் படத்தின் டிரைலர் மாலை வெளியான நிலையில், ட்ரெய்லர் வெளியாகி 1 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் லைக்குகள் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கும் படம் ‘பிகில்’. கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது இந்த படம். படத்திற்கான அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே விஜய் ரசிகர்கள் பல்வேறு ட்ரெண்டிங்களை செய்து வந்தனர். எப்போது ட்ரெய்லர் வரும் என காத்திருந்த நிலையில் இன்று மாலை ட்ரெய்லர் வெளியானது.

ட்ரெய்லர் வெளியான ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் பல திரைப்பிரபலங்களும் ட்ரெய்லர் நன்றாக உள்ளதாக பிகில் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.