செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (15:25 IST)

தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கிங்: சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை |

சாம்சங் கேலக்ஸி செல்போன் பயன்படுத்துபவர்கள் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கிங் செய்யப்படுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகும் மொபைல் போன்களில் ஒன்று சாம்சங் என்பதும் இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
இந்த நிலையில்  சாம்சங் கேலக்ஸி பயன்படுத்துவார்கள் தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் போன்றவை ஹேக் செய்யப்படுவதாக சமீப காலமாக அதிகமாக புகார் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
சமூக வலைதளங்களில்  பின் நம்பர் போட்டும் விரல் ரேகை பயன்படுத்தியும் தங்களது செல்போன் லாக் செய்யப்பட்டு இருப்பதாகவும்  தங்களது சமூக வலைதளங்களை பயன்படுத்தாத முதல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகமாக புகார் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
எனவே சாம்சங்  பயனாளர்கள் உடனடியாக தங்கள் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்யுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran