1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (15:45 IST)

சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஃப்ரெண்ட்லி ஸ்மார்ட்போன்! – Samsung Galaxy A05 சிறப்பம்சங்கள்!

Samsung Galaxy A05
பிரபலமான சாம்சங் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலையிலான Samsung Galaxy A05 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்தியாவில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் நல்ல தரத்தில் சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனமும் தனது புதிய Samsung Galaxy A05 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy A05 சிறப்பம்சங்கள்:

6.7 இன்ச் PLS எல்சிடி ஸ்க்ரீன்
மீடியாடெக் ஹெலியோ G85 சிப்செட்
2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
4 GB RAM + 4 GB விர்ச்சுவல் RAM
64 GB இண்டெர்னல் மெமரி
1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட் வசதி
50 MP + 2 MP ப்ரைமரி டூவல் கேமரா
8 MP முன்பக்க செல்பி கேமரா
4G, VoLTE, Bluetooth, WiFi, USB-C Type
5000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Samsung Galaxy A05 ஸ்மார்ட்போன் ப்ளாக், லைட் க்ரீன், சில்வர் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Samsung Galaxy A05 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 ஆகும்.

Edit by Prasanth.K