வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஜூலை 2023 (09:19 IST)

அதிகமான பேட்டரி பவர்.. அளவான சிறப்பம்சங்கள்! – பட்ஜெட் விலையில் Samsung Galaxy M34 5G!

Samsung Galaxy M34 5G
சாம்சங் நிறுவனம் அதிகரிக்கப்பட்ட பேட்டரி பவர் கொண்ட பட்ஜெட் விலையிலான புதிய Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் சாம்சங் நிறுவனம் விலை உயர்ந்த ஃபோன்கள் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வரை பல வகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்கள் கொண்ட Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே
  • சாம்சங் எக்ஸினோஸ் 1280 சிப்செட்
  • 2.4 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13
  • 6 ஜிபி/8ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1 டிபி வரை நீட்டிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்
  • 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ட்ரிப்பிள் கேமரா
  • 13 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 6000 mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ, பிரிஸம் சில்வர் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் 6ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ. 18,999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.20,999 ஆகவும் உள்ளது.

Edit by Prasanth.K