எல்ஐசி பங்கு விற்பனை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு!
எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் கூட இந்த பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்க விண்ணப்பிக்க முடியாது என ஏற்கனவே எல்ஐசி நிறுவனம் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் போலவே பிரதமர் காப்பீட்டு திட்ட உறுப்பினர்களும் இந்த பங்குகளை சலுகை விலையில் வாங்க முடியாது என எல்ஐசி நிர்வாகம் தெரிவித்துள்ளது
முன்னதாக பிரதமர் காப்பீட்டு திட்ட உறுப்பினர்கள் 10 சதவீதம் வரை தள்ளுபடியில் எல்ஐசி பங்குகளை வாங்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது