வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (17:48 IST)

பிக்பாஸ் ப்ரோமோவில் கலந்துகொண்ட சிம்பு! 6 வாரத்துக்கு ஒப்பந்தம்!

நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கலந்துகொள்ள உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டு நடித்துக்கொடுத்துள்ளார். அடுத்து வாராவாரம் சனிக்கிழமை அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். 6 வார காலத்துக்கு அவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.