வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (10:53 IST)

அதானியின் கடன்களை தள்ளுபடி செய்கிறதா மத்திய அரசு? முன்னாள் முதல்வர் சந்தேகம்..!

adani
பிரபல தொழிலதிபர் அதானியின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய திட்டமிட்டிருப்பதாக முன்னாள் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 
 
அதானி உள்ளிட்ட பெரிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்கிறார் என்றும் தற்போது அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதை அடுத்து அதானியின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்றும் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட காங்கிரஸ்தான் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாரதிய ஜனதா 600 வாக்குறுதிகளை அளித்தது என்றும் ஆனால் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva