கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: மத்திய அரசு அனுமதி!
கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: மத்திய அரசு அனுமதி!
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு புதிய மருந்து பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
இந்தியாவில் தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன
இரவு நேர ஊரடங்கு முழு ஊரடங்கு மற்றும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்ட போதிலும் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் என்ற புதிய மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விராஃபின் என்ற இந்த மருத்து நோயாளிக்கு வெளிப்புறத்திலிருந்து ஆக்சிஜன் வழங்கும் தேவையைவிட குறைக்கும் என்றும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போகப்போகத்தான் தெரியும்