வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:54 IST)

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டது… நீதிமன்றம் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் முற்றிலும் தோற்றுவிட்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்தல் கால பரப்புரைகளால் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இது சம்மந்தமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ‘தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருந்தும் கட்டுபாடுகளை நெறிமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோற்றுள்ளது. சுற்றறிக்கைகளை வெளியிடுவதைத் தாண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தின் போது தேர்தல் ஆணையம் வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சியினர் பரப்புரை மற்றும் வாக்களிக்கும் போது  கட்டுப்பாடுகளை கடைபிடிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை’ எனக் கூறியுள்ளது.