தொடர்புடைய செய்திகள்
- மருத்துவ துறையில் ஸ்வாந்தே பாபோவுக்கு நோபல் பரிசு நியாண்டர்தால்களை ஆய்வு செய்தவர்
- சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?
- சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலையில் இத்தனை உடல் ஆரோக்கிய நன்மைகளா...!!
- 2022- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
- இத்தனை அற்புத ஆரோக்கிய பலன்களை தரக்கூடியதா சாத்துக்குடி...?
போலி மருந்துகளை கண்டறிய க்யூ.ஆர் கோடு? – விலை அதிகரிக்க வாய்ப்பா?
இந்தியா முழுவதும் போலி மருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் மருந்து அட்டைகளில் க்யூஆர் கோடு இடம்பெற செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவமுறை அதிகமான பயன்பாட்டில் உள்ள நிலையில் மருந்தகங்களில் பல்வேறு நோய்களுக்குமான ஏராளமான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மருந்து, மாத்திரைகளில் சில போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும் கூட சிலரால் விற்பனை செய்யப்படுவது மக்களை பெரிதும் பாதிக்கிறது.
இதனால் மருந்து பாட்டில்கள் மற்றும் அட்டைகளில் க்யூஆர் கோடு பதிக்கும் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, விலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக அத்தியாவசிய மருந்துகளான ஆண்டிபாடி மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி, தொற்றுக்கு எதிரான மருந்துகள் மற்றும் அட்டையின் விலை ரூ.100க்கும் மேல் உள்ள மருந்துகளில் இந்த க்யூஆர் கோட் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த கூடுதல் வசதியை செய்வதால் மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலையை 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Edited By: Prasanth.K
அடுத்த கட்டுரையில்
