1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (16:06 IST)

இந்தியாவை கண்டு அஞ்சும் நிறுவனங்கள்! – பிரெஞ்சு நிபுணர் கருத்து!

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளதாகவும், ஜிடிபி மதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவது உண்மைதான் என பிரெஞ்சு பொருளாதார வல்லுனர் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக இந்திய பொருளாதாரமும், திட்டமிடல்களும் தொடர்ந்து சரிவை கண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வந்தாலும், மத்திய அரசு அதை மறுத்தே வந்துள்ளது. இந்நிலையில் பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மன் ”ஆரம்ப காலங்களில் பிரதமர் மோடியின் பொருளாதார திட்டமிடல்கள் சரியாகவே இருந்தன. அவருடைய ‘மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்கள் இந்திய பொருளாதாரம் உயர்வதற்கான நம்பிக்கையை அளித்தன. ஆனால் திடீரென நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த நோக்கத்தை விட்டுவிட்டு அரசியல் நோக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஒரு நாட்டின் மீது நம்பிக்கை இருந்தால்தான் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வருவார்கள். ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த நம்பிக்கை குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் அச்சப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா சரியான பொருளாதார கொள்கையை பின்பற்றவில்லை என்றால் மேலும் சரிவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.