1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Central Government extend internation air service ban

சர்வதேச விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு! – மத்திய அரசு அறிவிப்பு!

Central Government
கொரோனா காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு முதலாக சர்வதேச விமான சேவைகளுக்கு இந்தியா தடை விதித்தது. இதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் பாதிப்பை பொறுத்து இது மேலும் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!